நெல் வரப்பில் உளுந்து, தட்டைப்பயறு, சூரியகாந்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் நன்மை செய்யும் பூச்சியான பொறிவண்டு, வரப்பு பயிர்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து, தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை மற்றும் இளம் புழுக்களை அழித்து மகசூல் இழப்பைத் தடுக்கிறது.
அசோஸ்பைரில்லம் என்ற உயிரி உரத்தை ஒரு ஏக்கருக்கு 3 கிலோ வீதம் மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடும் பொது அது பயிர்களுக்கு தேவையான தழைச்சத்தை கிரகித்து கொடுக்கும்.